Sunday, October 3, 2010

வளநாடு-கள்ளர் நாடு

வளநாடு:
                    வளநாடுகளெல்லாம் சோழமன்னர்களின் பெயர்களையே பெயராகக்கொண்டுள்ளன.
சோழருக்கு வளவர் என்பது ஒரு பெயராகலின் அவர் ஆண்ட நாடுகள் வளநாடு எனப்பட்டன. அவ்வச்சோழர் காலத்திலேயே அவை உண்டாயின ஆகலின் வள நாடு என்னும் பெயர் தொன்று தொட்டதாகாது.. ஒரு காலத்தில் நாடு என வழங்கியது பிறிதொரு காலத்தில் வளநாடு என்றாயது என்பதற்கு ‘மழநாடான ராஜாசிரய வளநாட்டுப் பாச்சிற் கூற்றம்’ என வருவது சான்றாகும்.
நாட்டின் பிரிவுகள் தொன்று தொட்டு இங்ஙனம் வேறு பட வழங்கிவந்தாற் போலவே இப்பொழுது கள்ளர்கள் மிக்குள்ள சோழ பாண்டி மண்டலங்களில் வழங்கி வருகின்றன. வள நாடு, நாடு முதலிய பல பிரிவுகளும் இப்பொழுது விரவிக்கிடக்கின்றன. நாட்டின் எல்லைகள் சில ஊர்கள் அளவிற் குறுகியும் உள்ளன. இந்நாடுகட்கெல்லாம் தலைவராயினார் கள்ளர் குலத்தோர் ஆதலின் இவை பொதுவே கள்ளர் நாடு எனவும், கள்ளர் பற்று எனவும் வழங்குகின்றன. கள்ளர்களுக்கு நாட்டார் என்னும் பெயர் பொதுவாக வழங்குகிறது. கள்ளர் நாடுகளைப் பற்றி தெரிந்தவரை இங்கே எழுதுகின்றேன் .

                கோட்டம், நாடு என்னம் பிரிவுகள் தொண்டைமண்டத்திலும், வளநாடு, நாடு என்னும் பிரிவுகள் சோழமண்டலத்திலும் இருந்திருக்கின்றன. பல ஊர்கள் சேர்ந்து ஒரு நாடும், பல நாடுகள் சேர்ந்து ஒரு கோட்டமும் பல கோட்டங்கள் சேர்ந்து ஒரு மண்டலமும் ஆகும்.அப்படியே பல ஊர்கள் சேர்ந்து ஒரு நாடும் பல நாடுகள் சேர்ந்து ஒரு வளநாடும் பல வளநாடுகள் சேரந்து ஒரு மண்டலமும் ஆகும் கோட்டத்தின் உட்பட்ட நாடு என்பதன் உட்பிரிவாக கூறு என்பதொன்றும் சிறு பான்மை காணப்படுகிறது   சோழ மண்டலமானது வளநாட்டிற்கு மேலாக தென்கரை நாடு, வடகரைநாடு என்னும் பிரிவினையும் உடைத்தாயிருந்தது. இப்பிரிவு காவிரியால் ஏற்பட்டதாகும்.     

              
                            நாவலர் பண்டித ந மு வேங்கடசாமி நாட்டார் எழுதியுள்ள கள்ளர் சரித்திரம் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்.

தமிழரது நாடு தமிழ்நாடு எனவும், தமிழகம் எனவும் வழங்கி வருவது போன்று தமிழரில் கள்ளர் வகுப்பினர்மிக்குள்ள நாடு கள்ளர் நாடு எனவும் கள்ளகம் எனவும் வழங்கப் பெறுகின்றது. தென்னம நாடு, உரத்தநாடு, பாப்பாநாடு, பைங்காநாடு போன்று என பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்டதாய் கள்ளர் நாடு இருந்தது.

கள்ளர் நாடுகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் கள்ளர் குலத்தவரில் ஒருவரோ பலரோ தலைவராக இருப்பர். அவர்களுக்கு அம்பலகாரர் அல்லது நாட்டாண்மைக் காரர் என்பது சிறப்புப் பெயராகும். சில இடங்களில் காரியக்காரர் என்றும் சொல்வதுண்டு. ஊரிலுல்லோர் எல்லாவிதமான வழக்குகளையும் அம்பலகாரரிடம் தெரிவித்துக் கொள்ள அவர் வழக்குகளின் உண்மையைக் கண்டறிந்து ஒருபுறமும் கோணாது நடுவு நிலையாகத் தீர்ப்புச் செய்து விடுவர். வழக்காளிகலும் தீர்ப்பிற்குக் கட்டுபட்டு நடப்பர். அம்பலகாரர் என்னும் உரிமையைப் பணம் முதலிய எக்காரணத்தாலும் ஒருவர் திடாரென அடைந்து விடுவதில்லை. அது பரம்பரையாக வந்து கொண்டிருப்பதொன்றாம். ஒருக்கால் அம்பலகாரர்க்குச் சந்ததியில்லாது போய்விடின், அவரைச்சார்ந்த தகுதியுடைய வேறு யாரையாவது ஊரார் தேர்ந்தெடுத்துக் கொள்வர். அம்பலகாரர் பொருள் குன்றி எவ்வளவு எளியராய்ப் போய்விடினும் அவரது உரிமைக்குப் பழுது வருவதில்லை. சில சமயங்களில் பெண்டிரும்கூட அவ்வுரிமையை வகித்து நடத்துவராவர்.

நாம் இங்கே சொல்லியனவெல்லாம் உலகத்தில் பல வகுப்பினர் இப்பொழுது மேற்கொண்டு சய்வனவே. ஒன்றும் புதிதன்று. செய்வதற்கு அருமையானதுமன்று. ஒவ்வொரு வகுப்பினரும் தங்கள் முன்னேற்றத்திற்கு எவ்வளவு பாடுபட்டு வருகின்றனர் ? ஆந்திர நாட்டில் ரெட்டி வகுப்பினரும், மைசூர் நாட்டில் வொக்கலிகர் என்ற வகுப்பினரும் மிக உழைத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் நாடார் என்னும் சான்றார் வகுப்பினரைக் குறிப்பிடலாகும். இவர்கள் செய்து வரும் காரியங்கள் மிக வியக்கற்பாலனவாகும். இனி கள்ளர்கள் ஏனையெல்லா வகுப்பினரோடும் அன்பும், ஒற்றுமையும் உடையராய்க் கலந்து வாழ்தல் வேண்டும். சில வகுப்பினர் சில பழக்கங்களினாலே தம்முடன் உணவு முதலியவற்றில் கலந்து கொள்ள முடியாதவராயிருப்பர். அத்தகைய இடங்களில் தாமும் தம் வகுப்பின் பெருமைக்குக் குறைவுண்டாகாதவாறு நடந்துகொள்ளல் வேண்டும். பொதுவில் உலகிலுள்ள மக்களெல்லாம் தமக்குச் சமமானவரென்றும் நண்பரென்றும் போற்றியொழுகுதல் வேண்டும்.

இனி, இவர்களோடு ஓரினமாக எண்ணப்படுகின்ற மற்றை வகுப்பினரைக் குறித்தும் இங்கே சிறிது கூறுதல் பொருத்தமாகும் என நினைக்கின்றோம்.

கள்ளர்களைப் போன்றே மறவர் என்போரும் தமிழ்நாட்டில் ஓர் பெருங்குழுவினராவர். இராமநாதபுரம் சேதுபதி மன்னர் இவ்வகுப்பினரென்பதை யறிவோர் இவ்வகுப்பானது தொன்றுதொட்டு எவ்வளவு மேன்மை வாய்ந்துளதென்பதை உணரக்கூடும். சேதுபதிகளைப் போன்று தமிழை வளர்த்தோரும், புலவர்களை ஆதரித்தோரும், வள்ளன்மை சிறந்து விளங்கினோரும் எண்ணிறந்த அளங்க ளியற்றினோரும் உலகத்தில் யாவருளர் ? அன்றியும் இராமேச்சுரும் சென்று இறைவனை வழிபட்டு வருவோர் யாவரே யெனினும் அவர்கள் சேதுபதிகளையும் தரிசித்து வருவது தொன்றுதொட்ட வழக்கமாயிருப்பது அன்னோரது ஒப்பற்ற மாட்சியைப் புலப்படுத்துவதாகும். இராமநாதபுரத்தரசர் போன்றே செல்வத்திலும் பெருமையிலும் சிறந்த சிவகங்கை மன்னரும் இவ்வகுப்பினராவர். இவர்களேயன்றி பாலவனத்தம், பாலையம்பட்டி, சிங்கம்பட்டி, கடம்பூர், ஊற்றுமலை, சேற்றூர், சொக்கம்பட்டி, ஊர்க்காடு, கொல்லக்கொண்டான் முதலிய பல சமீன்றார்கள் இவ்வகுப்பினராக வுள்ளனர்.

அகம்படியரென்போரும் ஓர் பெருங்குழுவினரான தமிழ் மக்களாவர். இவர்களும் தொன்று தொட்டு உயர்ந்த நிலையில் இருந்து வந்திருக்கின்றனர். இவ்வகுப்பினரில் பெருநிலமும், பெருஞ்செல்வமும் வாய்ந்தோர் அளவற்றவர்கள் இப்பொழுதும் இருக்கின்றனர்.

இம்மூன்று வகுப்பினரும் அஞ்சாமை, வீரம், ஈகை முதலிய குணங்களில் ஒரு பெற்றியே சிறந்து விளங்குவோராவர். மற்றும் பல தன்மைகளில் அவர்கள் ஒப்புமையுடைரா யிருக்கின்றனர். இம்மூன்று வகுப்பும் ஒவ்வொரு காலத்தில் கல்யாணம் முதலியவற்றாலும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டிருக்கின்றன. இராமநாதபுரத்தரசர்க்குச் செம்பிநாடன் என்ற பட்டமும், சேற்றூர் ஜமீன்றார்க்குச் சோழகர் என்ற பட்டமும், கொல்லங்கொண்டான் ஜமீன்றார்க்கு வாண்டையார் என்ற பட்டமும் இருத்தலாலும் சேற்றூர் ஜமீன்றார் விக்கிரம சோழன் மரபினர் என்றும், கொல்லங்கொண்டான் ஜமீன்றார் தஞ்சைப் பக்கத்திலிருந்து வந்தவர் என்றும் கூறப்படுதல் முதலியவற்றாலும் இவர்களும் ஆதியில் கள்ளர் வகுப்பினரே யாவர் என்று சிலர் கருதுகின்றனர். இவர்கள் எல்லோரும் ஒரே வகுப்பினர் என்ற உணர்ச்சி இப்பொழுதுஇம் இருந்து வருகிறது. இவ்வுணர்ச்சிக்கு அறிகுறியாகச் சிற்சில இடங்களில் சங்கங்களும் ஏற்படுத்தியிருக்கின்றனர்.

இவர்கள் தமிழ்மொழியைப் போற்றிப் புரந்துவந்திருக்கின்றனர். மதுரையிலும் கரந்தையிலும் உள்ள தமிழ்ச்சங்கங்கள் இவர்களால் நிறுவப்பெற்றும் புரக்கப் பெற்றும் வருவதிலிருந்து இப்பொழுதும் இவர்கள் தமிழ் மொழிக்கு ஆதரவாகவிருப்பது புலனாம். எனினும் இவர்கள் தம் தாய்மொழியைப் புரப்பதில் இன்னம் மிகுதியான ஊக்கமெடுத்துக்கொள்ளக் கடமைப்பாடுடையவர் என்பதனைக் குறிப்பிட விரும்புகின்றோம். இனி, தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு வகுப்பினரும் தாம் இப்பொழுது பல பிரிவினராக இருப்பினும் தாமெல்லாம் தமிழ்த்தாயின் மக்களாகிய ஒரே யினத்தவரென்னும் உண்மையுணர்ந்து யாவரும் அன்பும் ஒற்றுமை யுணர்ச்சியும் உடையவராக எவரையும் சிறியரென்று இகழாதிருப்பராக, தம் பண்டைப் பெருமையை நினைவு கூர்ந்து, மீட்டும் அப்பெருமையை நிலைநிறுத்துதற் பொருட்டு ஒற்றுமையுடனும் ஊக்கத்துடனும் உழைப்பாராக, கருணையங் கடலாகிய இறைவன் இவர்கட்கு எல்லா அறிவாற்றலையும் தந்து இந்நாட்டினைப் பாதுகாப்பானாக, எங்கும் அவன் புகழே மிகுதல் வேண்டும். மன்னுயிரெல்லாம் இன்புற்று வாழ்தல் வேண்டும்.                      திருவாளர் S. குமாரசாமி மேல்கொண்டார் அவர்கள் ஓர் செப்புப் பட்டயத்திலிருந்து எழுதிய கள்ளர் நாடுகளின் பெயர்கள்:

“தந்தி நாடு, மனைப்பள்ளி நாடு, அய்வூர் நாடு, அஞ்சு முகநாடு, ஏரிமங்கல நாடு, மேலத் துவாகுடி நாடு, கீழத் துவாகுடி நாடு, கொற்கை நாடு, செங்குள நாடு, மேல் செங்குள நாடு, கீழ செங்குள நாடு, பூளியூர் நாடு, செங்கணி நாடு, பிரம்பை நாடு, கானம்பூண்டி நாடு, சித்தர்குடி நாடு, மேல மகாநாடு, கீழ் வெங்கை நாடு, குளமங்கல நாடு, சித்துபத்து நாடு, குழந்தைவளநாடு,பனையக்கோட்டை நாடு,அருமலைக்கோட்டை,காசாங்கோட்டை நாடு, தென்னம நாடு, ஒக்கு நாடு, உரத்த நாடு, பட்டுக்கோட்டை வளநாடு, கறப்பிங்கா நாடு, அஞ்சுவண்ணப் பத்து நாடு, கல்லாக்கோட்டை நாடு, அய்யலூர் நாடு, தென்பத்து நாடு, மத்தச் செருக்குடி நாடு, அன்னவாசற்பத்து நாடு, கண்ணுவாரந்தய நாடு, கோட்டை பத்து நாடு, பிங்களக் கோட்டை நாடு, மேலப் பத்து நாடு, பெரிய கூத்தப்ப நாடு, அறந்தாங்கி கீழாநெல்லி நாடு, வடுவூர் நாடு, திருமங்கலக் கோட்டை நாடு, பாப்பாநாடு, முசிரி நாடு, பின்னையூர் நாடு, விற்குடி நாடு, அம்பு நாடு, ஆலங்குடி நாடு, நிசிலி நாடு, நாலு நாடு, காசா நாடு, கோனூர் நாடு, சுந்தர் நாடு, மின்னாத்தூர் , நொழயூர் நாடு, அண்டக்குள நாடு, செருவாசல் நாடு, திருப்பத்து நாடு, அஞ்சில நாடு, ஆமையூர் நாடு, கிளியூர் நாடு, மல்லாக்கோட்டை நாடு, மழைநாடு, காவல் நாடு, காவிக்கோவில் நாடு, வலல நாடு, மாலை நாடு, பட்டமங்கல நாடு, கண்டர் மாணிக்க நாடு, கம்பனூர் நாடு, பாகையூர் நாடு, செருக்குடி நாடு, தெருபோகி நாடு, இருப்ப நாடு, எய்ப்பாம்பா நாடு, வன்னாடு, முத்து நாடு, சிலம்ப நாடு, செம்பொன்மாரி நாடு, சீழ் செங்கை நாடு, எயிலுவான் கோட்டை நாடு, மேலூர் நாடு, வெள்ளூர் நாடு” என்பன.

             தஞ்சைக் கள்ளர் மகா சங்கம் அமைச்சராகிய திருவாளர் நடராஜ பிள்ளை அவர்கள் (பி.ஏ.,பி.எல்.,) வாயிலாகக் கிடைக்லுற்ற செய்திகள் பின் வருவன:

நாட்டின் பெயர் (தஞ்சாவூர்)
நாட்டின் முதற்கரை
பொதுத்தலம்

காசாநாடு
குழந்தை வளநாடு 
அருமலைக்கோட்டை
தெக்கூர்
கோயி
கேனூர் நாடு
தெக்கூர்
கோட்தைத்தெரு
பின்னையுர்நாடு
பின்னையூர்
தென்னம நாடு
தொன்னம நாடு
கன்னந்தங்குடி நாடு
மேலையூர்
உரத்த நாடு
புதுவூர்
கோயிலூர்
ஒக்கூர் நாடு
மேலையூர்
கீழ ஒக்கூர் நாடு
கீழையூர்
திருமங்கலக் கோட்டை நாடு
மேலையூர்
தென்பத்து நாடு
பேரையூர்
அப்பராம்பேட்டை
ராஜவளநாடு
நடுவாக்கோட்டை
பைங்கா நாடு
வடுகூர் நாடு
தென்பாதி
கோயில்பத்து நாடு
கம்பை நத்தம்
கோயில்பத்து
சுந்தர நாடு
வளமரங்கோட்டை
குளநீள் வளநாடு
துரையண்டார் கோட்டை
கடம்பர் கோயில்
பாப்பா நாடு
தெற்குக் கோட்டை
சங்கரனார்கோயில்
அம்பு நாடு தெற்க வடக்குதெரு
செங்குமேடு 12டான் விடுதி
அம்புகோயில்
வாகரை நாடு
குருங்குளம்
வடமலை நாடு
பகட்டுவான் பட்டி
கொற்கை நாடு
செங்கிபட்டி கூனம் பட்டி
ஏரிமங்கல நாடு
ராயமுண்டான்பட்டி
வெண்டையன்பட்டி
செங்கள நாடு
விராலிப்பட்டி
நொடியூர்
மேலைத்துவாகுடிநாடு
சூரியூர்
மீசெங்கிளி நாடு
தண்டுகமுண்டநாடு
அடைக்கலங்காத்தநாடு
அள்ளூர்
பிரம்பை நாடு
பிரம்பூர்
கண்டி வள நாடு
நடுக்காவேரி
வல்ல நாடு
இளங்காடு
தந்தி நாடு
நத்தமாங்குடி
வாராப்பூர்
பொன்னம் விடுதி
ஆலங்குடி நாடு
ஆலங்குடி
வீரக்குடி நாடு
வாண்டான் விடுதி
திருமணஞ்சேரி
கானாடு
திருவரங்குளம்
கோ நாடு
பெருங்குளூர் நாடு
பெருங்களூர்
கார்யோக நாடு
ஊமத்த நாடு
சிங்கவனம்

No comments:

Post a Comment