Monday, September 27, 2010
தஞ்சை பெரிய கோயில் 1000 ஆண்டுகள்
தஞ்சை : தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா நாளை கோலாகலமாக தொடங்குகிறது. 26ம் தேதி வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தஞ்சையை ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழனால் 1910ல் பெரிய கோயில் கட்டப்பட்டது. இதன் ஆயிரமாவது ஆண்டு நிறைவு தமிழக அரசு சார்பில் 5 நாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக தஞ்சை நகரை அழகுபடுத்தவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அரசு ஸீ25 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. பெரியகோயில் சிலைகள், கோபுரம், அகழி, மதில் சுவர் பராமரிப்பு மற்றும் புணரமைப்புப் பணிக்காக மத்திய கலாசாரத்துறை ஸீ25 கோடி நிதி ஒதுக்கியது. இதன்மூலம் தஞ்சையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விழா நடைபெறும் தஞ்சை பெரியகோயில், திலகர் திடல், அரண்மனை வளாகம் மற்றும் ஆயுதப்படை மைதானங்களில் பிரமாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரங்குகளில் வைப்பதற்காக பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் கலைநயம் மிக்க பல்வேறு உருவச்சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆயுதப்படை மைதானத்தில் பெரியகோயில் வடிவிலேயே விழா மேடை அமைக்கப்படுகிறது. விழா மேடையிலும், அரங்கிலும் வைப்பதற்காக பாவை சிலைகள், உழவர் சிலைகள், பல்வேறு சாமி சிலைகள் பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மூலம் செய்யப்பட்திருந்தது. இவைகளை தினமும் குடும்பத்துடன் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து சென்றனர்.
22ம் தேதி தஞ்சையில் சங்கமம் நிகழ்ச்சியுடன் விழா நிகழ்சிகள் தொடங்கின. கரந்தை தமிழ் சங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவை , மதிய மந்திரி எஸ். எஸ்.பழனிமாணிக்கம் , தமிழக அமைச்சர் கோ. சி.மணி ஆகியோர் முரசு கொட்டி தொடங்கி வைத்தனர்.
தஞ்சை பெரிய கோவிலின் விழாவினையொட்டி நாட்டுபுற கலைகர்களின் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்ற ஐந்து இடங்கள்.
1.சிவகங்கை பூங்கா
2.ராஜராஜன் மணிமண்டபம்
3.தொல்காப்பியர் சதுக்கம்
4.பழைய வீட்டு வரியா குடியிருப்பு
5.கரந்தை தமிழ் சங்கம்
சிறப்புமிக்க தஞ்சை பெரியகோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா பெரியகோயில் வளாகத்தில் நாளை மாலை 5.30க்கு தேன்மொழி ராஜேந்திரன் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
24ம் தேதி காலை 9.30 மணிக்கு தஞ்சை அரண்மனை வளாகத்தில் சோழர் கால சிறப்பு கண்காட்சியை தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதே நேரத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இந்திய பெருமைக்கு தஞ்சையின் பங்கேற்பு என்ற ஆய்வரங்கத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்து நூல் வெளியிட்டர்.
25ம் தேதி பெரியகோயிலில் காலை 9 மணிக்கு நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், 10.30க்கு சிறப்புக் கருத்தரங்கமும் நடைபெறகிறது. இதில் நிதி அமைச்சர் அன்பழகன், கனிமொழி எம்பி பங்கேற்கின்றனர். அன்று மாலை பத்மா சுப்பிரமணியன் குழுவினரின் 1,000 பேர் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி நடைபெற்றது.
26ம் தேதி மாலை 5 மணிக்கு தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நிறைவு விழா நடைபெறுகிறது. இதில், தமிழக முதல்வர் கருணாநிதி விழாப்பேருரையாற்றினார் .
தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சை பெரிய கோவில் கோபுரம் போன்று அமைக்கப்பட்டு இருந்த பிரமாண்டமான மேடையில் பெரிய கோவில் தபால் தலை மற்றும் பெரியகோவில்,ராஜராஜன் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயம் வெளியுடப்பட்ட்து .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment