Saturday, October 30, 2010

ஸ்ரீ பழங்குளத்து அய்யனார் ஆலயம்-குழந்தை வளநாடு

ஸ்ரீ பழங்குளத்து அய்யனார் ஆலயம்.
   
                     பழங்காலத்திலிருந்தே தமிழக மக்கள் விடாது வணங்கி வரும் வீரத்தெய்வங்களுள் மிகச் சிறப்பு மிக்க காவல் தெய்வமாக கருதப்படுவது அய்யனார் ஆகும். அய்யனார் ஊர் மக்களை தீயசக்திகளிலிருந்து காப்பதற்காக எப்போதும் இரவு நேரங்களில் குதிரை மீது சவாரி போவார் என்று மக்கள் நம்புகிறார்கள். அய்யனார் நாட்டுப்புறத் தெய்வங்களில் மேல்நிலை ஆக்கத் தெய்வமாக மதிக்கப்படுகிறார். இவர் பல ஊர்களில் பல்வேறு பெயர்களில் வழிபடப்படுகிறார்.

அய்யனாரை ஐயனார் என்றும் எழுத்து மொழியில் எழுதுவோம். ஐ என்றால் தலைமை, அழகு, வியப்பு, அரசன், ஆசான், கடவுள், தந்தை என பல பொருள்படும்.

                                பலநூறு வருடங்களுக்கு முன்னர் சோழ மன்னனால்  தஞ்சை தரணி ஆளப்பட்டபோது, அவரது ஆட்சியின் கீழ் இருந்த பெருவாரியான நிலப்பரப்பு வளநாடுகளாக பிரிக்கப்பட்டு , அதற்கு குறிப்பிட்ட சில தலைவர்களின் கீழ் ஆட்சி செவ்வனே நடைபெற்றது. இத்தகைய வளநாட்டில் ஒன்றான குழந்தை வளநாட்டில் அமைந்துள்ளது ஸ்ரீ பழங்குளத்து அய்யனார் ஆலயம்.
         
                   தஞ்சாவூரிலிருந்து  பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் மன்னார்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது சடையார்கோவில்.

             பெரும்பாலும் அய்யனார் ஊரின் காவல் தெய்வமாக விளங்கும். இந்த அய்யனாரோ பல ஊர்களுக்கு காவல் தெய்வமாக விளங்குகிறார்.ஸ்ரீ பழங்குளத்து அய்யனார் ஆலயத்தில் ஸ்ரீ தூண்டில்கார அய்யனாரும் ஸ்ரீ கோபால்சாமி அய்யனாரும் இருந்து அருள்பாளிக்கின்றனர்.அய்யனார் ஆலயம் செல்லும் முகப்பில் ஸ்ரீ செல்வா விநாயகர் நின்று அருள்பாலிக்கின்றார்.செல்லும் வழியின் இரு புறமும் தென்னை மரங்கள் அழகுற காட்சியளிக்கின்றன.

           அய்யனார் ஆலயத்தை சுற்றிலும் அடர்ந்த கடு அச்சம் செனிக்கும் வகையில் அமைந்துள்ளது. கோவிலின் முன் பிரகாரத்திற்குள் செல்லும் முன் நம்மை வியந்து நோக்க வைக்கின்றன அய்யனார் வளம் வரும் குதிரை சிலைகள்.கோவிலின் கோபுரங்களில் பண்டைய கல சிற்ப வேலைபாடுகள் மிளிருகிறன.
         
        கோவிலின் உள் சன்னதியுனுள் பெண்களுக்கு அனுமதி கிடையாது.ஆகவே முன் பிரகாரத்தில் தெய்வங்களின் மாதிரி வடிவங்கள் சுதை சிற்பங்களாக சிறு அறை போன்ற அடைப்பினுள் வைத்து வழிபடபடுகிறது.
    
        ஆலயத்தை சுற்றியுள்ள கட்டில் குரங்குகளும் மயுல்களும் மிகுதியாக உள்ளன.குரங்குகளுக்கு பக்தர்கள் செய்யும் அன்னதமும் கட்டில் உள்ள பழங்களும் உணவுகலகின்றன.
     
       முன் பிரகாரத்தின் தெற்கு மூலையில் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது.இது குரங்குகளுக்கு தலைவனாக விளங்கிய ஒரு ஆண் குரங்கின் சமாதியாகும்.முன் பிரகாரத்தையடுத்து அய்யனார் ஆலயத்தினுள் செல்லும் வழியின் இரு புறங்களிலும்
மண் கொண்டு செய்யப்பட சுடுமண் குதிரை,யானை மற்றும் தெய்வ உருவ சிலைகள் உள்ளன.இவைகள் அருமலை கோட்டையில் மண் எடுத்து கைதேர்ந்த குயவர்களை கொண்டு செய்யப்பட்டவை.
            
            உட்பிரகாரம்  செல்லும் வழியில் இடது புறம் வட திசை நோக்கி ஸ்ரீ கோபால்சாமி அருள்பாலிக்கின்றார்.உட்பிரகாரம் செல்லும் முன் வலது புறம் தென் திசை நோக்கி ஸ்ரீ தூண்டிகார அய்யனார் அருள்பாலிக்கின்றார்.உட்பிரகாரத்தின் இரு புறங்களிலும் போரிற்கு ஆயுத்தமான நிலையில் பல்வேறு தெய்வங்கள் காட்சியளிக்கின்றன.

        அய்யனாரின் எதிர் திசையில் யானை சிலையொன்று வணங்கி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறது.கருவறைக்கு முன் இரு புறமும் துவாரபாளர்கள் கையில் ஆயுதங்களுடன் காட்சியளிக்கின்றனர்.கருவரயிலே அய்யனார் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கின்றார்.
 

























No comments:

Post a Comment