INDIA-TAMILNADU-THANJAVUR-ARUMALAI KOTTAI
குழந்தை வளநாடு
"கொண்ட கொள்கையில் குறி தவறாத கொண்டையார்"
சாமி அய்யா கொண்டையார்
பரம்பரை ரத்தம் உடம்பிலே முறுக்கேறி
ஓடும் அறம் காத்த சமுதாயமே!
ஆன்மிகம் வளர - நிலைக்க ஆலயங்கள்
பல அமைத்த அரசகுலத் தோன்றல்களே!
முத்தமிழ் வளர்த்த முக்குலத்துச் சிங்கங்களே!
வருக! வருக!! வருக!!!
"வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது!
வேலும் வாழும் தங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது!
எக்குலத் தோரும் ஏற்றிப்புகழ்வது எங்கள் பெருமையடா!
எம் முக்குலத்தோர்க்கே உலகில் உவமை காண்பது அருமையடா!"
- கவியரசு கண்ணதாசன்
'சிவகங்கை சீமை' திரைப்படத்தில் மருதுபாண்டியர்களை மனதில் நிறுத்தி எழுதிய பாடல் வரிகள்
தேவர் சமுதாயத்திற்கே உரிய அடைமொழியை யார் யாரெல்லாம் தங்கள் பெயருக்கு பின்னால் சேர்த்துப் போலி பெருமை தேடுகிறார்கள்! வரிப்புலியை போல் உடலில் சூடு பதித்துக் கொள்கிற காட்டுப் பூனைகளை வரிப்புலிகள் என்று வரலாறு அறிந்தோர் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.
முக்குலம் எனில் கள்ளர், மறவர், அகமுடையார் ஆவர்.
"கள்ளர், மறவர் கனத்ததோர் அகமுடையார்மெல்ல மெல்ல வருவான் வெள்ளாளன் ஆவான்"
நமது மூதாதையராம் சேர,சோழ,பாண்டிய மன்னர்களின் நீதி வலுவா ஆட்சியில், "கள்ளர்" என்பது மறைந்திருந்து பகை மூலத்தையும், நாடு நடப்புகளையும், உள்ளூர் துரோகிகளையும் அறிந்து அரசர்களுக்கு ரகசியமாகக் கூறும் ஒற்றர் படையைக் குறிக்கும் சொல்லாகும்.
"மறவர்" என்பது களத்தில் எதிரிகளை நேருக்கு நேர் சந்தித்து புறமுதுகு காட்டாமல், வீரப் போர் புரிந்து, நாட்டை காத்தோரைக் குறிக்கும் சொல்லாகும். "அகமுடையார்" என்பது கோட்டைக்குள் (அகத்தில்) இருந்த படைப்பிரிவினர். இவர்கள் கோட்டையை உள்ளேயும், வெளியேயும் காத்து நின்றோர். கோட்டைக்குள் புகுந்த எதிரிப்படைகளுடன் மோதி, அவர்களை அழிக்கும் வல்லமை வாய்ந்தவர்கள். இது அகமுடையார் பணியாக இருந்தது.
நமது மன்னர்கள் இந்த முக்குலத்தின் ஏக பிரதிநிதிகளாக, முக்குலத்தின் ஒப்பற்ற வீரமும் விவேகமும் கூடிய ஏந்தல்களாக இருந்தனர். மூன்று பிரிவுகளும் சமநிலை உடைய ஆட்சிப்பிரிவுகள். இந்த வரலாற்று உண்மையை நெஞ்சில் பதிய வைப்போம். யாவருக்கும் புரிய வைப்போம்.
No comments:
Post a Comment