சுந்தர பாண்டியன் வளநாடு -சுந்தர வளநாடு :
சுந்தர நாடு-சுந்தர நாட்டில் இடம்பெற்றுள்ள ஊர்கள்
- வாளமர் கோட்டை.
- வரவுக்கோட்டை
- காட்டூர்
- கரைமீன்டார் கோட்டை
- வாண்டையார் தெரு - (வாளமர் கோட்டை)
- வாண்டையார் இருப்பு
- வாண்டையார் இருப்பு வடக்கு
- வாண்டையார் இருப்பு தெற்கு
- கொட்டைன்டார் இருப்பு
- திருநாஇருப்பு
- நாய்க்கான் கோட்டை
- மடிகை
- ஜென்பகபுரம்
- தென்கொடார் இருப்பு
- பெரன்டார் கோட்டை
- துறையூர்
சுந்தரநாடு வாளமர் கோட்டை ஸ்ரீ சுந்தரேஸ்வர சுவாமிதிருக்கோயில் தல வரலாறு..
சுந்தரநாடு வாளமர் கோட்டை என்ற பெயருக்குமுன் வழங்கப்பட்ட பெயருக்கன காரணம் என்னவென்றால் முன்னொரு காலத்தில் ஸ்ரீசுந்தரேஸ்வர சுவாமியை ஆலங்காட்டில் பிர்மவிஷ்ணுவாதி தேவர்களால் பூஜிக்கப்பட்ட காரணத்தால் வானவர் கோட்டை என்றும் பெயர் வழங்கப்பட்டது.
பின் ,
சுந்தரநாடு வாளமர் கோட்டை என்று பெயர் வழங்கப்பட்டது ஏன்?.
இந்த பெயர் எதோ ஊருக்கு பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்டது இல்லை இது ஒரு சரித்திரம்.
ஒரு முறை மன்னன் வேட்டையாடுவாதற்காக வந்த போது தாகமாக இருக்காவே இங்குள்ள ஆல்ங்காட்டில் உள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து பக்கத்திலுள்ள குளத்தில் தண்ணிர் குடித்து விட்டு கிளம்பும் போது மன்னன் அங்குள்ள சிவலிங்கத்தை காணுகிறார்.அம்மன்னன் உடனை தனது உடைவாளை கிழே வைத்து சிவலிங்கத்தை தரிசித்து மிண்டும் வாளை எடுக்க முயன்ற்போது வாள் வரவில்லை.
மன்னன் தன்னை மறந்து சிவலிங்கத்தை தரிசிக்கும் போது மன்னனுக்கு இடபரூடராய் ( இறைவன் சிவபெருமன்)காட்சியளித்த பின் இந்த வானவர் கோட்டை என்ற பெயர் வாள்அமர் கோட்டை என்றனது.
பிறகு அம்மன்னன் மகன் சுந்தர பாண்டியன் இந்த இடத்தில் திருக்கோயிலை எழுப்பி இத்தலத்தில் எழுந்தாருள்யுள்ள மூர்த்திக்கு சுந்தரேஸ்வரர் என்றும் இந்நாட்டிற்கு சுந்தரநாடு என்றும் பெயர் வைத்து அம்மன்னன் இத்தலத்திலே இருந்து சமாதி அடைந்தார். அவர் திரு உருவத்தை இந்த ஆல்யத்திற்கு மேற்க்கே காணலாம்.
தவத்திரு காத்தையா சுவாமிகள்-சுந்தர வளநாடு:-
தவத்திரு காத்தையா சுவாமிகள் குருபூஜை விழா
14-ம் ஆண்டு வாளமர்கோட்டை
தவத்திரு காத்தையா சுவாமிகள் குருபூஜை விழா:-தவத்திரு காத்தையா சுவாமிகள் குருபூஜை விழா (25-10-2010) அன்று பூஜைகள் மற்றும் அண்ணதனம் சுவாமிகளுக்கு மிகவும் சிறப்பாக பூஜை நடைப்பெற்றது இதில் சுந்தர நாட்டு மக்கள் கலந்துகொண்டு தவத்திரு காத்தையா சுவாமிகளின் அருள் பெற்று சென்றனார்.