Saturday, November 20, 2010

சௌந்தரநாயகி உடனுறை வேணிநாதசுவாமி திருக்கோவில்

                                                           உ
                                                   சிவ மயம்
 சௌந்தரநாயகி உடனுறை வேணிநாதசுவாமி திருக்கோவில்

                            


மூலவர்              :   வேணிநாதர்
  உற்சவர்:  -
  அம்மன்/தாயார்:  சௌந்தரநாயகி 
  தல விருட்சம்:   வில்வம் 
  தீர்த்தம்:   சூரிய புஷ்கரிணி, சந்திர புஷ்கரணி, 
  ஆகமம்/பூஜை :   -
  பழமை :   1000-2000 வருடங்களுக்கு முன்  
  புராண பெயர் :  பிறைமதி சூடிய சடையார் கோவில் 
  ஊர் :  சடையார் கோவில் 
  மாவட்டம் :  தஞ்சாவூர்
  மாநிலம் :  தமிழ்நாடு
 பதிகம்                       :   -

 நாடு                          : குழந்தை வளநாடு -குந்தவை வளநாடு  

                     தெய்வ மனம் கமழ சிந்தையை சிவமயமக்கி சித்தத்தில் உள்நின்று உணர்த்தவல்ல பன்னிரு திருமுறைகளிலே வழிபாட்டிற்குரிய தேவாரம் ,திருவாசகம் போன்ற தெய்வீக பாக்களை அருளிய சமய குரவர்கள் தோன்றி அவர்தம் பாடல்பெற்ற அனேக திவ்ய தலங்களை தன்னகத்தே கொண்டு தெய்வ தன்மையால் விளங்குவதும் காவிரியின் கருணை பெருக்கால் வளமிகு செழும் நிலங்களால் சூழபெற்றதுமான சோழவள நாட்டின் தலைநகரமாம் நஞ்சை கொஞ்சும் தஞ்சயம்பதியின் கீழ்பால் குழந்தைவள நாடு எனும் குந்தவை வளநாட்டை சார்ந்த இத்திருக்கோவில் கடந்த 1913 ஆண்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது.

        இத்தலம் சடையார்கோவில், சௌந்தரநாயகி உடனுறை வேணிநாதசுவாமி மற்றும் விநாயகர், முருகன், அருணாச்சலேஸ்வரர், உண்ணாமலை அம்மன், நூதன பிரதிஷ்டையாக துர்க்கை அம்மன் மற்றும் உள்ள பரிவார தெய்வங்களும் அமையப்பெற்று பக்க்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.


               இத்தகு ஆலயத்தின் சிதிலமடைந்த பகுதிகள் அரசின் நிதி உதவியோடும் வெளியூர், உள்ளூர் கிராமவாசிகளாலும் 
                                    "திருப்பணி அருளாளர்" கோவை. முனைவர். இராச. வசந்தகுமார் அவர்கள் பங்கேற்ப்புடனும் புதிப்பிக்கபெற்று புதிதாக மண்டபங்கள் அமைக்கப்பெற்று வர்ண கலாபங்கள் செய்து புனர் வந்தனம் செயவிக்கபெற்று நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2041 ஐப்பசி மாதம் 4 ம் தேதி (21 .10 .2010 ) வியாழக்கிழமை நடைபெற்றது.



விநாயகர் துதி :
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் மெயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே


சிவன் துதி :
காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நல்நெறிக்கு உய்ப்பது
வேதநான் கினும் மெய்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயமே...


அம்மன் துதி :
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
பூங்குழலாள் சௌந்தரநாயகி  கடைக்கண்களே.

No comments:

Post a Comment